வி.சுகிர்தகுமார்
இனநல்லுறவை வலுப்படுத்தும் இப்தார் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இஸ்லாமிய சகோதரர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.பபாகரன் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.எஸ்.எம்.உவைஸ் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ராஜஸ்ரீ கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் உத்தியோகத்தர்கள் வரவேற்று அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.றியால்டீன் உரையாற்றினார்.
இதன் பின்னராக நோன்பின் முக்கியத்துவம் பற்றி மார்க்க சொற்பொழிவை அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.கே.ஜமால் முஹம்மட் மதனி வழங்கினார்.
தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்லாஹி ஏ.ஜி.அப்துல் றவுவ் அதானை ஒலிக்கச் செய்தார்.
இதன் பின்னராக நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வருடந்தோறும் இடம்பெறும் இந்நிகழ்வானது இனநல்லுறவை வலுப்படுத்தும் வகையிலும் பல் சமய நிகழ்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment