முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் 1ஆம் திகதி வரை சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் அக்டோபர் 16ஆம் திகதி இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment