(க.கிஷாந்தன்)
நுவரெலியா - இராகலை நகரில் இன்று (24.04.2022) காலை அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிளாலர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது
சென்லெனாட்ஸ் தோட்டம், இராகலை மேல்பிரிவு, இராகலை கீழ்பிரிவு, ஹல்கரனோயா தோட்டம், டெல்மார் தோட்டம், சூரியகாந்தி தோட்டம், ஸ்டாபோட் தோட்டம், சின்னஒப்ராசி ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், இராகலை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், ஆசிரியர்கள், நகர வர்த்தகர்கள் என சுமார் 200ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக இராகலை நகரம் வந்து அங்கு அணைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
Post a Comment
Post a Comment