மகாயாகம்




 


ஆத்மஞானபீடத்தில் உலக சேமத்திற்கான மகாயாகம்

 (காரைதீவு  சகா)

உலக சேமத்திற்கான மகா யாகமும் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் தெய்வீகதிருப்பாதங்களுக்கு அபிசேக ஆராதனையும் மண்டுர் பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஆஸ்தான குருவாக வந்து இதனை நிகழ்த்திவைத்தார்.

அத்துடன் மகாலிங்க வடிவான ஈசனுக்கு அபிசேக ஆராதனைகளும் இடம்பெற்றன.

நாதஸ்வர மேதாளங்கள் சகிதம் மிகவும் பக்திபூர்வமாக விடியவிடிய இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டு மகாயோகியின் பாதங்களுக்கு பாதநமஸ்காரம் செய்தனர்.
அனைத்து பக்தர்களுக்கும் ஆத்மஞானபீட காவிநிற வஸ்திரம் வழங்கப்பட்டு தமிழில்  ஆராதனை நிகழ்த்தப்பட்டது.