சம்மாந்துறையில் வலயக்கல்விப்பணிப்பாளர் நஜீமிற்கு சிறப்பான தடம்பதிவிழா
(காரைதீவு சகா)
சம்மாந்துறை கல்வி வலயத்தில் அதிகூடிய எட்டுவருட வலயக்கல்விப்பணிப்பாளர் சேவையைப் பூர்த்திசெய்து சாதனை படைத்திருக்கும் இலங்கை கல்வி நிருவாகசேவை தரம் 1 அதிகாரியான சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமைப் பாராட்டும் தடம்பதி விழா கடந்த வெள்ளிக்கிழமை பணிமனையில் நடைபெற்றது.
வலயக்கல்வி அலுவலகத்தின் கல்விசார் உத்தியோகத்தர்களது ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழா ஒன்றியத்தலைவரும் கோட்டக்கல்விப்பணிப்பாளருமான எம்.எ.சபூர்த்தம்பி தலைமையில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் ஊர்வலத்துடன் ஆரம்பமானது.
பின்பு பணிமனை மண்டபத்தில் கௌரவிப்பு விழா நடைபெற்றது. அறிமுக விளக்கவுரையை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா சிறப்புரைகளை பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.எஸ்.எம்.அமீர் ,பி.எம்.யாசீர்அறபாத் சிறப்புக்கவிதையை இசட்.எம்.மன்சூர் இனியபாடலை எம்.எஸ்.எ.நசார் ஆகியோரும் நிகழ்த்தினர்.
பணிப்பாளர் நஜீமின் அதிகூடிய வலய 8வருட பூர்த்தியையொட்டி ஆளுயர மாலையை எம்.எம்.எம்.ஜௌபரும், பொன்னாடையை எம்.எ.சபூர்த்தம்பியும் , நினைவுச்சின்னத்தை வி.ரி.சகாதேவராஜாவும் அணிவித்துக் கௌரவித்தனர்.இறுதியில் 8வருடசாதனைக் கேக் பணிப்பாளரால் வெட்டப்பட்டு ஏனையோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
சம்மாந்துறை வலய ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் திருமதி எம்.ஜ.அஸீனா, சிரேஸ்டவிரிவுரையாளர் அன்ஸார் மௌலானா ஆகியோரிணைந்து பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
ஏற்புரையை பணிப்பாளர் நஜீமும் ,இறக்காமம் கோட்டக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.மகுமூட்லெவ்வையும் நிகழ்த்தினர்.
சம்மாந்துறை வலயம் உருவாக்கப்பட்ட 1998ஆண்டு காலப்பகுதி முதல் இதுவரை ஆறு கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் வலயக்கல்விப்பணிப்பாளராக இருந்துள்ளனர். இதுவரை எம்.எ.எம்.சாபிதீன் ஜ.எம்.இஸதீன் எம்.ரி.எ.தௌபீக் எம்.கே.எம்.மன்சூர் எஸ்.எஸ்.அப்துல்ஜலீல் யு.எல்எம்.ஹாசிம் ஆகிய அறுவர் பணியாற்றியுள்ளனர்.ஏழாவது அதிகாரியாக ஜனாப் நஜீம் 2014.03.03ஆம் திகதி பதவியேற்று இன்றுடன்(03.03.2022 - வியாழக்கிழமை) எட்டுவருடமாகின்றது.இதுவரை பணியாற்றிய ஆறு அதிகாரிகளுள் எம்.ரீ.எ.தௌபீக் 7வருடங்கள் 10மாதங்கள் 24நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ளார்.
ஆக 24வருட வரலாற்றைக்கொண்ட சம்மாந்துறை வலயத்தில் அதிகூடிய 08வருடங்களைத்தாண்டி பல சாதனைகளைப் படைத்து சேவையாற்றிவருகின்ற ஒரேயொரு கல்வி நிருவாகசேவை அதிகாரி ஜனாப் நஜீம் ஆவார்.என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment