நேரடி அரசியலுக்கு தயாராகிறது நாபீர் பௌண்டஷன் : அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
நூருல் ஹுதா உமர்
நாபீர் பௌண்டஷன் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துவரும் மக்கள் சந்திப்பும், நாபீர் பௌண்டஷன் ஒலுவில் பிரதேச செயற்குழுக் கூட்டமும் நேற்று இரவு ஒலுவில் பிரதேச இணைப்பாளர் எம்.ஆர்.பரீட் தலைமையில் ஒலுவில் பறண் தோட்டத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக நாபீர் பௌண்டஷனின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஹிர் மற்றும் ஓய்வுபெற்ற சம்மாந்துறை மத்திய கல்லூரியின் அதிபரும், ஈ.சி.எம். நிறுவனத்தின் பொது முகாமையாளருமான ஏ.எல்.எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்காலத்தில் அம்பாரை மாவட்டத்தில் நாபீர் பௌண்டஷனின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தலைமைத்துவம் தொடர்பாக கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதுடன் ஒலுவில் பிரதேச மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாபீர் பௌண்டஷன் கணக்காளர் அப்துல் பாசித் மற்றும் நாபிர் பெளன்டேஷன் இணைப்பாளர் முஹம்மட் கியாஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மத்திய குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
Post a Comment
Post a Comment