வி.சுகிர்தகுமார் 0777113659
சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் வேலைத்திட்டம் ஆரம்பம்
சுகாதார தகவல்களை கணனி மயப்படுத்தலும் முகாமைத்துவம் செய்தலும் எனும் வேலைத்திட்டம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை சுகாதார தகவல்கள் பணிப்பாளர் வைத்தியர் பாலித கருனபேம கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
வைத்தியசாலை நோயாளிகளை பார்வையிடல், மருந்து விநியோகம், இரத்த பரிசோதனைகள், கதிரியிக்க பரிசோதனைகள் என அனைத்து தகவல்களையும் கணனி மயப்படுத்தப்பட்டு மிக குறுகிய நேரத்திற்குள் சேவை வழங்குவதே இதன் நோக்கமாகும் என வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா தெரிவித்தார்
நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர் எம். தௌபீக், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவன (ஐஊவுயு) தலைவர் எம்.ஆர் ஒஸ்கட சேனாநாயக்க ,விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment