சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்தவர் கைது




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடி படையினர்  கைது செய்துள்ளனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  திங்கட்கிழமை(28) இரவு  பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து சிவில் உடையில் சென்ற உத்தியோகத்தர் குழு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் சந்தேக நபரை கைது செய்துள்ளது.

இவ்வாறு கைதானவர்  நிந்தவூர் மௌலானா வீதியை சேர்ந்த அஹமது லெப்பை முஹமது றிபாய் - (வயது 52 )  என்பவராவார்.

குறித்த நப ர்      மோட்டார் சைக்கிளுடன்  2400 சிகரெட்டு பக்கெற்றினை எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன்  பெறுமதி  102000 ரூபா என  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்  நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.