பூமி பூஜையில் சேவையாளர்களுக்கு கௌரவம்!
(காரைதீவு சகா)
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கென கல்முனை வாடி வீட்டு வீதியில் கிடைக்கப்பெற்ற காணியில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூசை நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரனின் தலைமையில் இப்பூமிபூஜை இடம்பெற்றது.
குறித்த காணியினை வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உதவிசெய்த வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர்களான டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன் , டாக்டர் நடராஜா ரமேஷ், கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சமுகசெயற்பாட்டாளருமான சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
கூடவே இந் நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மற்றும் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் நலன்விரும்பிகள் ,வைத்தியசாலை முன்னாள் இந்நாள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பல தடைகளை தாண்டி இந்த காணி வைத்தியசாலைக்கு கிடைக்க தொடர்ந்து பாடுபட்ட அனைவருக்கும் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் நன்றிகளை தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment