தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை வெளியான தகவல்களின்படி உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Twitter பதிவை கடந்து செல்ல, 1
All real-time trends and results of Elections will be available on ECI's website https://t.co/kpYetPcU6R and Voter Helpline App from 8:00 am onwards today.
Stay updated!#AssemblyElections2022 #ElectionCommissionOfIndia #ECI pic.twitter.com/pHdLj0aggs
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) March 10, 2022
Twitter பதிவின் முடிவு, 1
உத்தராகண்டின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
மணிப்பூரின் 60 தொகுதிகள் இரு கட்டங்களாகத் தேர்தலைச் சந்தித்தன.
உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்டமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்டமாக நிறைவடைந்தது.
Post a Comment
Post a Comment