´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது




 


கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற ´நெந்துன்கமுவே ராஜா´ என அழைக்கப்படும் யானை உயிரிழந்துள்ளது.


இன்று காலை யா​னை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழக்கும் போது ´நெந்துன்கமுவே ராஜா´வுக்கு வயது 69 ஆகும்.


நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ´நெந்துன்கமுவே ராஜா´ கடந்த முறையும் எசல பெரஹெராவின் புனித கலசத்தை சுமந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.