உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாக அடங்கும்,
அப்போது இறையுணர்வுபெறமுடியும் நினைத்த காரியம் சித்தியாகும்.!
இந்துக்களின் முழுமுதற்கடவுளாம் சிவபெருமானை நினைந்து வழிபடும் மிகவும் பிரதானமான முக்கிய விரதம் சிவராத்திரி விரதமாகும்.மாசி மாதம் கிருஷ்ண பக்ஷ தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாசிவராத்திரி மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு அபிஷேக அலங்காரம் சிறப்பு பூஜை செய்ய முடியாவிட்டாலும் ,அருகில் உள்ள சிவன் ஆலயத்தில் அன்றைய தினம் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வது நல்லது.
மகா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும் சிவனுக்கு என்னென்ன பொருட்களால் அபிஷேகம் அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை 'மகா சிவராத்திரி கற்பம்' என்ற சிறிய நூலில் விளக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்குத் தேவையான உணவு நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
ஆனாலும் அனைவராலும் விரதம் இருக்க முடியாது என்பது நிதர்சனம். குழந்தைகளும்இ பெரியவர்களும் அவர்கள் உடல் நிலையைப் பொறுத்து உணவு எடுத்துக் கொள்வது அவசியம் தான். சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் .ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி.
மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம் லிங்காஷ்டகம் ,பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம்.
சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்கள் மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு ,உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள். பணியில் உள்ளவர்கள் வேலையை முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தலே போதுமானது.
சிவராத்திரி அன்று மனதில் சொல்லவேண்டிய மந்திரம்:'சிவாய நம ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ சிவ ஓம் '
. சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
தேன், பால் ,தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது.
மகாசிவராத்திரி முக்கியத்துவம்
இந்து புராணங்களின்படி மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கும் பார்வதி மாதாவுக்கும் திருமணம் நடந்ததாக நம்பப்படுகிறது. மகாசிவராத்திரியின் சிறப்பு சந்தர்ப்பத்தில் சிவபெருமானைக் கவர பக்தர்கள் விரதம் இருப்பார்கள். பார்வதி மாதாவைப் போல விரும்பிய வரன் கிடைக்க பெண்கள் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி விரதம் கடைப்பிடித்து பூஜை செய்கிறார்கள்.
மகாசிவராத்திரி பூஜை நேரம்
இந்த ஆண்டுஇ மகாசிவராத்திரிக்கு உகந்த நாள் மார்ச் 1 செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்குகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது.
மகாசிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது. நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான மங்களகரமான நேரம்:
முதலாம் சாம பூஜை: மார்ச் 1ம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை
இரண்டாம் சாம பூஜை: மார்ச் 1 இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை
மூன்றாம் சாம பூஜை: மார்ச் 2ம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை
நான்காம் சாம பூஜை: மார்ச் 2 காலை 3:39 முதல் 6:45 வரை
இந்த நாளில் மக்கள் மஹாமிருத்யுஜ்ய மற்றும் சிவ மந்திரத்தை ஓதுவார்கள்.சிவன் மந்திரம்: ஓம் நமசிவாய
நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் நாம் செய்த பாவங்கள் நீங்கி நமக்கு முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகா சிவராத்திரி வழிபாடு எப்போது தோன்றியது?
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவன்களும் அழிந்து விட்டன. அந்த மோசமான இரவுப் பொழுதில் அன்னை உமாதேவி ,சிவபெருமானை நினைத்து விரதமிருந்து பூஜித்து வந்தார்.
சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும்
அதோடு இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி சிவனுக்கு உரிய அபிஷேக அலங்கார அர்ச்சனை செய்து வழிபட்டார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக் கொண்டார்.
தான் பூஜித்த இந்த இரவு 'சிவராத்திரி' என்று கொண்டாடப்பட வேண்டும். அப்படிப்பட்ட அற்புத நாளில் தேவர்களும் மனிதர்களும் சிவ ராத்திரி என்ற பெயரில் ஈசனை விரதமிருந்து வழிபடும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வாழ்விலும் உலகிலும் உள்ள 'இருள் மற்றும் அறியாமையை வெல்வதை' நினைவூட்டும் வகையில் மகா சிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலான பண்டிகைகளைப் போலன்றி, இரவில் கொண்டாடப்படுகிறது மற்றும் ஒரு புனிதமான நிகழ்வாகும்.
இந்து புராணத்தின் படி, பிரம்மாவும் ,விஷ்ணுவும் யார் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று வாதிடுவதில் மும்முரமாக இருந்தனர். இதைக் கேட்ட சிவன் ஒரு பெரிய லிங்க வடிவில் காட்சியளித்தார். எரியும் நெருப்பின் முடிவை முதலில் கண்டுபிடிப்பவர் இந்துக் கடவுள்களில் பெரியவராகக் கருதப்படுவார் என்பது பிரம்மா மற்றும் விஷ்ணுவுடன் ஒப்புக் கொள்ளப்பட்டது.
விஷ்ணு பன்றி வடிவில் லிங்கத்தின் அடிப்பகுதியைத் தேடத் தொடங்கினார். பிரம்மா அன்னம் வடிவில்மேல் தேடத் தொடங்கினார். பல வருடங்களாக தேடியும் ஒரு முடிவு கிடைக்கவில்லை மேலும் இருவரும் சிவபெருமானை மிகவும் சக்திவாய்ந்தவராக ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.
மலர்கள்இ தூபங்கள் மற்றும் பிற பிரசாதங்கள் செய்யப்படுகின்றனஇ அதே நேரத்தில் பக்தர்கள் நாள் முழுவதும் 'ஓம் நம சிவாய' என்ற புனிதமான பஞ்சாக்ஷர மந்திரத்தை உச்சரிக்கின்றனர்.
வில்வ மரம்
வில்வ மரம் என்றும் அழைக்கப்படும் பெல் மரத்தை சிவபெருமான் விரும்புவதாக நம்பப்படுகிறது மேலும் அதன் இலைகள் மற்றும் பழங்கள் அவரது வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மஹா சிவராத்திரியன்று செய்ய கூடாதவை!
1.பக்தர்களுக்கு உணவு அளிப்பது
2.சிவ வழிபாட்டில் குங்குமம் அதிகம் பயன்படுத்தப்படுத்தக் கூடாது...
3.. சிவனுக்கு துளசி இலைகளை அர்ப்பணிக்கக்கூடாது. அப்படி அர்பணிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுவதுண்டு. துளசியின் மணாளனான ஜலந்தர் எனும் அரக்கனை சிவபெருமான் வதைத்த காரணத்தால். சிவபெருமானை தன்னுடைய இலைகள் கொண்டு வழிபடக்கூடாது துளசி சபித்தாக புராணங்கள் கூறுகின்றன...
4. சங்கரரை வழிபடும்போது சங்கு ஊதக்கூடாது. தண்ணீரைப் பிரதிஷ்டை செய்யக்கூடாது.
5. உடைந்த அரிசியை சிவபெருமானுக்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதுபோல அரிசி நன்கு தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
சிவப்பு மலர்கள் கடவுளால் சபிக்கப்பட்டவை என்பது நம்பிக்கை. அதனால்தான் சிவபெருமானுக்கு சிவப்பு மலர்களை அர்ப்பணிக்கக்கூடாது...
சிவராத்திரியை முறைப்படி அனுஸ்ட்டித்து வாழ்வில் உய்வோமாக.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு
Post a Comment
Post a Comment