நியமனம்




 


சர்ஜுன் லாபீர்,ரியாஸ் இஸ்மாயில்)


சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, சமூதாய சுகாதார இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயக்கொடியின் கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான இணைப்பு அதிகாரியாக கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியர்களின் சம்மேளன பொதுச் செயலாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியருமான ஏ.சி.டில்சாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனக் கடிதத்தை சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்தி, சமூதாய சுகாதார இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிறிர ஜயக்கொடி தனது அமைச்சில் வைத்து நேற்று (08) வழங்கி வைத்தார்.

பல சமூக அமைப்புகளில் பல்வேறுபட்ட பதவிகளிலிருந்து இருந்து சமூகத்தின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புகளுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.