பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவமுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலரணவு பொருட்கள் செவ்வாய்க்கிழமை இன்று (08)கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்து
வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது கல்முனை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமை தாங்கியதுடன் கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்
பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் நெறிப்படுத்தினார்.மேலும் பொலிசார் உலரணவு பொருட்களை பெற வருகை தந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விழிப்பூட்டல் கருத்துரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment