அம்பாறை மாவட்டத்தில் எரிபொருளினை பெற பொதுமக்கள் வரிசை





 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா ஐ.ஓ.சி  நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளினை பெற பொதுமக்கள் வரிசையில் நின்று சிரமப்பட்டதை அவதானிக்க முடிந்தது.இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும்இ ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது கடந்த வியாழன் (10)   நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்திருப்பதாக   லங்கா ஐ.ஓ.சி  நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் படி Petrol 92-Octane 254 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டன.

இதே வேளை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம்(ஐ.ஓ.சி) எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையை அடுத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் ஊடாக எரிபொருளை விநியோகிக்கின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருட்களின் விலையினை திருத்தம் செய்வது குறித்து பரீசிலனை செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.