சர்வதேச மகளிர் தின விழாவில்,தங்க மங்கை டொக்டர் தணிகாசலம் தர்சிகா கௌரவிப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  13 தங்கப்பதக்கங்களை பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தின்  MBBS     இறுதி பரீட்சையில் முதல் தரத்தில்  (First Class )  தேர்ச்சி பெற்ற  அக்கரைப்பற்றை சேர்ந்த வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்

நாடும் தேசமும் உலகமும் அவளே எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சிபாயா றமீஸின் ஏற்பாட்டில்; இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா பிரதம அதிதியாகவும், நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் சில்வஸ்டர் பரிமளவாணி வைத்தியர் தர்ஸிகாவின் தாயார் குமுதா ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் ஆலையடிவேம்பு பிரதேச மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராமமட்ட அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலும் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.  பின்னர் பிரதேச செயலரின் தலைமையுரையைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கடந்த வருட பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உட்பட 13 தங்கப்பதக்கங்களை பெற்று முதல் நிலை மாணவியாக தெரிவான வைத்தியர் தர்ஷிகா பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து சாதனை பெண்களான நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் சில்வஸ்டர் பரிமளவாணி வைத்தியர் தர்ஸிகாவின் தாயார் குமுதா தணிகாசலம் உள்ளிட்டவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பங்குபற்றுனர்களது சார்பில் மகளிர் தினத்தின் சிறப்பு தொடர்பான நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன், கிராமமட்டங்களில் சிறப்பான சமூகசேவையாற்றிய பெண்கள்;  கௌரவிக்கப்பட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

இதன்போது கிராமமட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட