காரைதீவு நிருபர் சகா
காரைதீவுஆயுர்வேத வைத்தியசாலையில் மூலிகைத்தோட்டம் (24) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மூலிகைத் தோட்டத்தில் மூலிகை கன்றுகளை நடும் வைபவம் நேற்று ஆயுர்வேத வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் எம் சிஎம் காலித் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபால் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார் .சமூக செயற்பாட்டாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.
இந்த மூலிகைத் தோட்டத்தின் பயன்பாடு பற்றி டாக்டர் காலித் அவர்கள் விரிவான விளக்கம் அளித்தார்.
Post a Comment
Post a Comment