அம்பாறை மாவட்ட தமிழ்எழுத்தாளர் பேரவையின் இலக்கியவிழா!





 VT.Sahadeaweraja

அம்பாறை  மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் எதிர்வரும் 2022 மார்ச் 8ம் திகதி மாவட்டம் தழுவியதான இலக்கிய நிகழ்வு ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது.


பேரவைத்தலைவர் ஜலீல் ஜீ தலைமையில் சம்மாந்துறையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பேரவையின் நிருவாகசபைக்கூட்டத்தில் மேற்படி முடிவு எட்டப்பட்டது என பேரவையின் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்.

 அத் தீர்மானத்துக்கு இணங்க 16 வரிகள் கொண்டதான கவிதையை எதிர்வரும் 15 பெப்ரவரி 20 22 முன்னர் 'தேசபந்து ஜலீல் ஜீ சம்மாந்துறை.' எனும் விலாசத்துக்கோ அல்லது 076 355 2423 எனும் 'வாட்ஸ்அப்' இலக்கத்துக்கோ அனுப்பி வைக்கலாம்.
கவிஞர்களுடைய புகைப்படத்துடன் அக்கவிதை நூலுருப் பெறவுள்ளதுடன் பெருவிழாவின் போது அக்கவிதையை தாங்களே வாசித்து காண்பிப்பதற்கும் சந்தர்ப்பம் மேடையில் வழங்கப்படவிருக்கிறது. கவிதை எழுதிய அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

அந்நிகழ்வில் இவ்வருடத்துக்கான பெறுமதி வாய்ந்த ஆவணமாக - 'சிறப்புக் கவிதை தொகுப்பு நூல்' ஒன்றினை மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிடவுள்ளதுடன்  விருது வழங்கி கௌரவிக்கவும் இருக்கின்றது.

கீழ்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில்  கவிதை வடிக்கலாம்.
 01. 'விடியல் தேடும் விட்டில்கள்'
02. 'அர்ப்பணிப்பில் உயர்ந்த ஆயிழை'
03. 'ஆணுக்குப் பெண் நாங்கள் அடிமையல்லோம்.'
04. 'மாதர்களை இழிவு செய்யும் மதியினர் ஒழிகவே! '

பெரு விழாவின் போதும் தெரிவுக்குழுவின் சிபாரிசுக்கு அமைவாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆளுமைகளில் சிலருக்கு 'மங்கையர் திலகம் -2022' எனும் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி  சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட இருப்பதும் சிறப்பம்சமாகும்.