Fwd: ஒரு இலட்சம் வாழ்வாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கஆலையடிவேம்பில் 154 வாழ்வாதார அபிவிருத்திதிட்டம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் வாழ்வாதார வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று அம்பாரை மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டது.
நிதி அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளிலும் இடம்பெற்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் 154 திட்டங்கள் இன்று ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வுகளில் பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் இணைப்பாளருமான கிந்துஜா பிரதீபன் பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ராஜஸ்ரீ உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மரநடுகை வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று 9 இல் சிகை அலங்காரம் மற்றும் அழகுக்கலை நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் அலங்கார நிலையத்திற்கான உபகரணமும் கையளிக்கப்பட்டது. இதேநேரம் தையல் கைத்தொழில் வேலைத்திட்டம் உள்ளிட்ட 154 வாழ்வாதார அபிவிருத்தி வேலைகளும் இன்று சம்பிரதாயபூர்வமாக காலை 8.52 இற்கு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.