பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டம் மருதமுனையில் புதன்கிழமை(2) இரவு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் பெற்றோர் சார்பான ஏனைய பிரதிநிதிகள் சகிதம் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் அதிபரால் ஊழல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பாடசாலையின் அபிவிருத்தி குழுவால் செய்யப்பட வேண்டிய வேலையை இப்பாடசாலையின் அதிபர் வேறு ஒரு பாடசாலையின் அதிபருக்கு கொந்துராத்து கொடுத்து உள்ளார்.
அத்துடன் நில்லாமல் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவே வேலையை செய்ததாக பொய்யான மோசடியான அறிக்கைகளை தயார் செய்தும் உள்ளார்.
இவை தொடர்பாக நாம் வலய கல்வி பணிப்பாளருக்கு நாம் பல முறைப்பாடுகளை செய்தும் அவர் எந்த நீதியான நடவடிக்கைகளையும் எடுக்காமல் அதிபரை காப்பாற்ற முயற்சிப்பதுடன் உடந்தையாகவும் நடக்கின்றார்.
அதிபர், வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் தொடர்பாக நாம்
மாகாண கல்வி பணிப்பாளருக்கு முறையிட்டு நீதிக்காக காத்திருந்தோம். அதிபருக்கு இட மாற்ற உத்தரவு திங்கட்கிழமை வந்ததாக அறிந்தோம்.
ஆனால் மறுநாள் அதே இட மாற்ற உத்தரவு மாகாண கல்வி பணிப்பாளரால் ரத்து செய்யப்பட்டது என்று அறிகின்றோம். குற்ற செயலுக்கு உடந்தையாக செயற்படுவதும், குற்றம் புரிந்தோரை காப்பாற்ற முயல்வதும், குற்றம் புரிந்தோர் மீது நடவடிக்கை எடுக்க தவறுவதும் சட்டத்தின் பார்வையில் குற்றங்களே ஆகும்.
காலம் கடந்த நீதியும் அநீதியே ஆகும். இருப்பினும் ஏற்கனவே நாம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணை குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணை குழு, ஆளுனர் ஆகியோருக்கும் எழுத்துமூல முறைப்பாடுகளை மேற்கொண்டு உள்ளோம்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலான கவனத்துக்கும் கொண்டு வந்து இருக்கின்றோம். அதே போல வெகுவிரைவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, கல்வி தினேஸ் குணவர்த்தன, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து முறையிடுகின்ற முன்னெடுப்புகளை ஆரம்பித்து உள்ளோம்.
எம்மை அடக்கி மௌனிக்க செய்வதற்கு ஊழல் சூத்திரதாரிகள் முயற்சிக்கின்றனர். எமது பாடசாலையில் பயில்கின்ற எமது பிள்ளைகளை பல வகைகளில் பழி வாங்குகின்றனர். எம் மீது அடாவடி அரசியல்வாதிகளையும், அடியாட்களையும் தூண்டி விட்ட வண்ணம் உள்ளனர்.
ஆயினும் நாம் இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச போவதில்லை. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடுவோம்.அதிபர் உடனடியாக மாற்றப்பட வேண்டும். வலய கல்வி பணிப்பாளர் மீதும் உரிய சட்ட, நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்று இன்னமும் விசுவாசிக்கின்றோம் என்றார்.
இதே வேளை அதிபரின் தற்காலிக இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரிஇ சம்மாந்துறை கல்விக்கோட்டத்தின் கீழுள்ள ஜமாலியா வித்தியாலயத்தின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை(1) அன்று முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பெற்றோர், “இப்பாடசாலைக்கு அவ்வப்போது பல அதிபர்கள் நியமனம் பெற்று வந்த போதிலும் இப்பாடசாலையானது கல்வியிலோ அல்லது பௌதீக அபிவிருத்தியிலோ முன்னேற்றம் காணவில்லை .
“இந்நிலையில், சுமார் இரண்டரை வருடத்திற்கு முன்னர் இப்பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்த பெண் அதிபரான எம்.எம் . மஹிஸா பானு எனும் அதிபர் முதலில் பெற்றோருக்கும் பாடசாலைக்குமான தொடர்பை ஏற்படுத்தி கல்வி மற்றும் பௌதீக அபிவிருத்தியில் பாரிய மறுமலர்ச்சியை மிக குறுகிய காலத்துக்குள் ஏற்படுத்தியுள்ளார்.
“எனவே, இந்த அதிபரை தற்காலிக இடமாற்றம் செய்ய கல்வி அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை மீள் பரிசிலனை செய்யுமாறு கேட்கின்றோர். எங்களுடைய அதிபரை மீண்டும் நியமிக்காத பட்சத்தில், எங்கள் பிள்ளைகளின் விடுகைப் பத்திரத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கான பெற்றோர்களின் கையப்பமும், கோரிக்கையும் அடங்கிய மகஜரை, சம்மாந்துறை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ. சபூரிடம் கையளித்தனர்.

Post a Comment
Post a Comment