திருக்கோவிலில அரசின் ஒருலட்சம் வேலைத்திட்டம் ஆரம்பம்!




 




ஜனாதிபதி கெளரவ கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமை, பிரதமர் கெளரவ. மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நிதி அமைச்சர் கெளரவ. பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலில் று நாடளாவிய ரீதியில், 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் பணிகள் எனும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 
அதற்கமைவாக இன்றைய தினம்
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம நிலாதாரி பிரிவுகளிலும் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் இவ் திட்டத்தில் 154 வேலைதிட்டங்களும் இத் திட்டத்திற்க 106 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதனை கொண்டு தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரம் உதவி திட்டங்கள் வழங்குவதற்கான ஆரம்பகட்ட நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் திருக்கோவில் கிராம நிலதாரி காரியாலயங்களில் இன்று இடம்பெற்றது .

இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ,உதவிப்பிரதேச செயலாளர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,கிராம நிலதாரி நிருவாக உத்தியோத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ,மற்றும் அபிவிருத்தி உத்தியோத்தர்கள் அரசியல் பிரமுகர்கள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்...

மேலும் பிரதேச செயலாளரால் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றது