மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழப்பு





 வத்தேகம-மடவல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 3 பேர் மண்ணுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு கட்டுமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது.