இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவியை இராஜினாமா செய்தார்
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் கைதான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகன் உள்ளிட்ட 07 பேருக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்றையதினம் (03) வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
குறித்த சம்பவம் தொடடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோவின் மகனான, 23 வயதான அச்சிந்த ரன்தில ஜெஹான் பெனாண்டோ நேற்றிரவு பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
Post a Comment
Post a Comment