அம்பாரை மாவட்டத்திலும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை




 


வி.சுகிர்தகுமார் 0777113659




  க.பொ.த. உயர்தரப்பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் பரீட்சைகள் சுமூகமான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
மாவட்டத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காண முடிந்தது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் நேரகாலத்திற்கு சமூகமளித்திருந்ததை காண முடிந்தது.
இதேநேரம் பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததையும் குறிப்பிடத்தக்கது.