சம்மாந்துறைக்கு தகுதியான பிரதிநிதியை பெற்றுக் கொள்வதற்கு அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும்!




 


சம்மாந்துறைக்கு தகுதியான பிரதிநிதியை பெற்றுக் கொள்வதற்கு  அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் : அஸ்பர் உதுமாலெப்பை


நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்


தேர்தல் வரும் முன்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை  பொது மக்கள்  நன்றாக 

சிந்தித்து செயற்பட வேண்டும் எதிர்காலத்தில் சம்மாந்துறைக்கு தகுதியான பிரதிநிதியை பெற்றுக் கொள்வதற்கு  அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டுமென சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், கடந்த பொதுத்தேர்தல் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன வேட்பாளருமான அஸ்பர் உதுமாலெப்பை  கோரிக்கை விடுத்துள்ளார்.


74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை கைகாட்டி குளம் அருகில் அமைந்திருக்கும் நீண்டகாலமாக யாரும் கவனிப்பாரற்றுக் கிடந்த கிரேஜ் வீதி  சுமார் 14.94 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் நிறைவு பெற்ற நிலையில்  இதனை திறந்து வைத்த பின் அங்கு  இடம் பெற்ற கூட்டத்தில் 

உரையாற்றிய போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை இவ்வாறு தெரிவித்தார்.


அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் 


சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்காளரை

கொண்ட சம்மாந்துறை தொகுதியில் கடந்த  பாராளுமனறத் தேர்தலில்  ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை எடுக்க முடியவில்லை என்றால் இதை பற்றி சிந்தித்து பார்த்தீர்களா  ? என  இதன் போது இங்கு உரையாற்றிய போது பொது மக்கள் மத்தியில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அஸ்பர் உதுமாலெப்பை மேலும் கேள்வியெழுப்பினார் .


நமது வாக்குகளை ஏனைய பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு அளித்து விட்டு அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கி விட்டு சம்மாந்துறை மண்ணுக்கு கிடைக்க வேண்டிய பாராளுமன்ற பிரதிநிதத்துவம்  இல்லாமல் இதனை சிந்திக்க தவறி விட்டதனால் தத்தளிக்கின்றோம்  எதிர்கால தேர்தலில் சம்மாந்துறைக்கான பாராளுமன்ற பிரதிநிதத்துவத்தை பெற அனைவரும் ஒன்று பட வேண்டும் .


இது தொடர்பில் ஒரு பொறிமுறையை உருவாக்க கோரி சம்மாந்துறை முச்சபையினருக்கு கடிதம் எழுதி அனுப்பியதுடன் அவர்கள் பதிலளிக்க ஒருமாத கால அவகாசம் வழங்கியிருந்தேன். ஆனால் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. எல்லோரும் சேர்ந்து ஊருக்கான சுயட்சை குழுவொன்ற அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று கோரி உள்ளேன். 


அன்று நாட்டின் சுதந்திரத்துக்காய் முஸ்லிம் சமூகம் பெரும் பங்காற்றினர் ஆனால் இன்று முஸ்லிம் சமூகம் இனவாதிகளா சித்தரிக்கப் படுகின்ற போது வேதனையாகவுள்ளது . இன்றுள்ள முஸ்லிம் தலைமைத்துவங்கள் எல்லாம் சமுகத்தின் நிலை தொடர்பில் சிந்திக்கவில்லை அவ்வாறு சிந்தித்து இருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் நடுநிலையாகவும் ,சிறுபான்மை  மக்களின் நலன் கருதி அவர்கள் இருந்திருக்க வேண்டும். 


30 வருட யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்து இந்த கொங்கீரிட்  ,கார்பட் பாதைகளை அறிமுகம் செய்து வைத்து   நாட்டை வளம் மிக்க தாய் மாற்றியர் அன்று இருந்த ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆவார். நான் வாக்குகளுக்காக சேவை செய்யவில்லை மக்களுக்காகவே சேவை செய்கிறேன் என்னுடைய முயற்சியினால் பல சேவைகளை செய்து கொண்டு வருகின்றேன் .


மேலும் குறித்த  வீதி அபிவிருத்தி செய்யவும்  

திட்டத்தை சம்மாந்துறை பிரதேசத்தில் செயல்படுத்த முழுமையாக ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் நெடுஞ்சாலைகள்  வீதி அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ,

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர். நிமல் லான்சா அவர்களுக்கு ,சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான அஸ்பர் உதுமாலெப்பை சம்மாந்துறை பிரதேசம் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இங்கு உரையாற்றினார்.