ஜனாதிபதி விருது பெற்ற செய்தி வாசிப்பாளர சனுஸ் முஹம்மத் பெரோஸ் மறைவு




 

பேருவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் இலங்கை வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் பணிபுரிந்தவருமான சிரேஷ்ட மீஉயர் ஒலிபரப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸ் காலமானார்.

பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர். இறுதிக் காலத்தில் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.


இலங்கை ரூபவாஹினியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரண்டு முறை வென்றவர். பல் வேறு நாடகங்களிலும் பங்கு கொண்டு கலைத் துறையிலும் பிரகாசித்தவர்.


அண்மைக் காலமாகத் திடீர்ச் சுகவீனம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.