விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகை அலங்கார ஒப்பனை




 


வி.சுகிர்தகுமார் 0777113659     


  74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று முற்போக்கு அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சிகை அலங்கார ஒப்பனை மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒப்பனையாளர் உதவும் கரங்கள் அமைப்பின் அம்பாரை மாவட்ட செயற்பாட்டாளர் செல்வம் உதயகுமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை உள்ளிட்ட இயக்குனர்சபை உறுப்பினர்கள் மேற்பார்வை செய்தனர்.
இதேநேரம் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் வேண்டுகோளுக்கமைய எதிர்காலத்திலும் அக்கரைப்பற்று முற்போக்கு அபிவிருத்தி சங்கத்தினால் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இப்பணியில் இணைந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்கள் தங்களுடன் இணைந்து செயற்படலாம் எனவும் கூறப்பட்டது.
குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்த அக்கரைப்பற்று முற்போக்கு அபிவிருத்தி சங்கத்திற்கு இல்லத்தின் ஸ்தாபகர் நன்றியை தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.