(காரைதீவு சகா)
சிவராத்திரி தினமான நாளை(1)செவ்வாய்க்கிழமை உலக சேமத்திற்கான சிவராத்திரி மகா யாகமும்,மகாசிவராத்திரி பூஜையினையும் நடாத்த மண்டூர் பாலமுனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆத்ம ஞான பீடம் தயாராகிவருகிறது.
அதனை முன்னிட்டு ஸ்ரீ ஆத்மஞான பீடத்திற்கு லிங்கோற்பவ சமேதரராய் மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்பஞான பீடத்திலிருந்து ஆன்மீக ஜெகத்குரு மகாயோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் நேற்று வருகை தந்தார்கள்.
சுவாமிகளுடன் மகா யாகத்திற்கான உயிர் ஜீவ மூலிகைகள் மற்றும் அபிசேகத் திரவியங்கள் வருகை தரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான உணவுப் பொருட்கள் அடங்கலாக சகலபொருட்களையும் தொண்டர்கள் கொணர்ந்தார்கள்.
Post a Comment
Post a Comment