(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் ஆளணியின்படி சுமார் 24ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. தற்போது 20ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். சுமார் 4000ஆசிரியருக்கு தட்டுப்பாடு நிலவியது.எனினும் அண்மையில் 3ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். கிழக்கு பாடசாலைகளில் பணியாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கவுள்ளோம்.
இவ்வாறு, கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக தெரிவித்தார்.
சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனை நடாத்திய நூல் வெளியீட்டுவிழாவில் பிரதமஅதிதியாக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திசாநாயக கௌரவஅதிதியாக கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர். அங்கு செயலாளர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நூல் வெளியீட்டுவிழா சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில்(தேசிய பாடசாலை) கடந்த வியாழனன்று நடைபெற்றது.
Post a Comment
Post a Comment