(காரைதீவு நிருபர் )
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பமாகியிருக்கிறது. நெல்லின்விலை அதிகரித்துள்ளபோதிலும்; செற்செய்கைக்கான செலவும், அறுவடை இயந்திரத்திற்கான கூலியும் அதிகரித்துள்ளது. கடந்தபோகத்தில் ஏக்கருக்கு 6000ருபா எடுத்தவர்கள் இம்முறை 8ஆயிரம் ருபா அறிவிடுகிறார்கள்.
"வரவு எட்டணா செலவு பத்தணா ".கடந்த போகங்களை விட இப்பெரும்போகம் முதன்முதலாக யுறியா போன்ற அசேதனப்பசளைகளின் பாவனை குறைவால் பொதுவாக விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் , நெல்லின்விலை 2000ருபாவால் அதிகரித்துள்ளது. கடந்தபோகத்தில் 1மூடை நெல்லின்விலை 2ஆயிரத்து 700ருபாவிற்கு வெட்டியவுடன் கொள்வனவுசெய்தார்கள். ஆனால் இம்முறை 1மூடை அந்தஇடத்திலேயே 4ஆயிரத்து 700ருபாவரை செல்கிறது.
அதனைக்காயவைத்துக்கொடுத்தால் 5ஆயிரத்திற்குமேல் கொடுக்கலாம். வழமைக்குமாறாக வெள்ளையைவிட சிவப்புநெல்லுக்கு 300ருபா வரை குறைவாகஇருக்கிறது என்று நாவிதன்வெளி விவசாயி வன்னியசிங்கம் கூறினார்.
'இப்போகத்தில் அரசாங்னத்தால் கட்டாய அசேதனப்பசளை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் கள்ளச்சந்தையில் யூறியாபசளை 26ஆயிரம் ருபா தொடக்கம் 35ஆயிரம் ருபாவரை விற்கப்பட்டது. யுரியா 35ஆயிரம் ருபாவிற்கு வாங்க எம்மிடம் வசதியில்லாமையினால் சேதனப்பசளையையே பாவித்தோம். எனது இரண்டு ஏக்கர் வழமையாக 70மூடைகளைத்தந்தது. இம்முறை ஆக 35மூடைகளே கிடைத்தது.விளைச்சல் அரைவாசியாகக்குறைந்தது. கொழுத்த விவசாயிகள் யூறியா பாவித்தகாரணத்தினால் சுமாரான விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் நெல்விலை கூடியிருப்பதால் அவர்களுக்கு அது இலாபமே' என்று விவசாயி வன்னியசிங்கம் மேலும் தெரிவித்தார்.
நெற்செய்கைக்கு பாவிக்கும் எந்த உரமாகவிருந்தாலும் திரவமாகவிருந்தாலும் உரியவேளைக்கு வழங்கினார்கள் என்றால் கொஞ்சமாவது பிரயோசனமாகவிருக்கும். பருவத்தே பயிர்செய் என்றார்கள் முன்னோர்கள்.உண்மை. பருவத்தில் பயிர்செய்து பருவத்திற்கு உரமிட்டால் மாத்திரமே உரிய விளைச்சலைப்பெறமுடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Post a Comment
Post a Comment