நிந்தவூர் – அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (31) 10 மணியளவில் சந்தேகநபர் ஒருவர் பயணித்த காரை பொலிஸார் பின்தொடர்ந்த சந்தர்ப்பத்தில், காரைதீவு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், காரின் சாரதியே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் ஏனையோதலைமறைவாகியுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment