அக்கரைப்பற்றில், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு 7 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை




 


#Reports/Irsaath

அக்கரைப்பற்றில், சட்ட விரோதமாக 12 கிராம் 840 மில்லிகிராம்  ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு  7 வருட  ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நீதிபதி ஹம்சா வதித்துள்ளார்.

கடந்த 2021.12.21 ந் திகதி முதல் ,குறித்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபர் இக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதை அடுத்து, இவருக்கு , (12 மாத கால)ஒரு வருட சிறைத் தண்டனையை,  7வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை தீர்த்ததுடன்,குறித்த போதைப் பொருளை வைத்திருந்ததற்கு ரூபா 10 000/=தண்டப் பணமும், அதனைக்  வாகனத்தில் எடுத்துச் சென்றதற்கு ரூபா 10 000/-  விதிக்கப்பட்டதுடன் இவர்  250 மணித்தியாலயங்களுக்கு  சமூதாயஞ்சார்   சீர்திருத்தப் பணிகளிலும்  அமர்த்தப்பட கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.