சாதனை மாணவி Dr.தர்ஷிக்காவினை ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபை இன்று கௌரவித்தது




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


அக்கரைப்பற்றின் சாதனை மாணவி தர்ஷிக்காவினை ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபை இன்று  கௌரவித்தது.
 கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவர் தணிகாசலம் தர்ஷிகாவின் இன்று சென்ற  ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபையினர் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டதுடன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.
 ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபையின் தலைவியும் மகாசக்தி அமைப்பின் தலைவியுமான துளசிமணி மனோகரராஜன்; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலந்து சிறப்பித்தனர்.
மத்தியஸ்த சபையின் உறுப்பினரான தர்ஷிகாவின் தந்தை தாய் உள்ளிட்ட குடும்பத்திற்கும் வாழ்த்தினை தெரிவித்த சபையின் தலைவர் உள்ளிட்டவர்கள் இணைந்து தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னத்தினை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்தவர்கள் தர்ஷிக்கா போன்ற சாதனையாளர்களை கௌரவிப்பதில் பெருமையுடன் மகிழ்ச்;சியுறுவதாகவும் குறிப்பிட்டனர்.
 சாதனை மாணவி தர்ஷிக்கா ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபைக்கு நன்றி கூறியதுடன் தனது சாதனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமது குடும்பம், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள், விடா முயற்சி என்பன தனது சாதனைக்கு வித்திட்டதனையும் அவர் நினைவுகூர்ந்தார்