கல்முனையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு





 (சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம்.அப்ராஸ்)


கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் அதன் புதிய செயலாளர் எம்.ஐ.எம்.ஜிப்ரியின்(எல்.எல்.பி)
முயற்சியினால் இவ் வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் நடைபெறுவதற்கு ஏதுவான சகல உதவிகளையும் நாபீர் பெளண்டேசன் அனுசரணையுடன் பிரமாண்டமான முறையில் நடத்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கையேடு,செயலட்டைகள் மற்றும் ஏனைய பொருட்களை வழங்கும் நிகழ்வு இன்று(11) கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசலையின் அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் பாடசாலை காலை ஆராதண நிகழ்வில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு நாபீர் பெளண்டேசன் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.இஸ்மாயில்,எம்.கியாஸ்,பாடசாலை பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.