ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை





வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தின் உதவியுடன் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (31)முன்னெடுக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வேண்டுகோளுக்கமைய இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் 241 ஆம் படைப்பிரிவின் கீழ் வரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்களுக்கு இராணுவத்தின் மருத்துவ பிரிவினரால் தடுப்பூசி  ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இதன் போது 2ஆம் மற்றும் 3ஆம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத அதிகளவான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம் கடந்த காலத்திலும் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட வைத்திய குழுவினர் அம்புலன்ஸ் வசதிகளுடன் வீடுகளுக்கு சென்று தடுப்பூசியினை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பொதுமக்களுக்கான ஆலோசனைகளையும் பிரதேச செயலகம் சுகாதாரத்துறையினருடன் இணைந்து வழங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.