இரு தடவை தடுப்பூசி ஏற்றிய மாலைதீவு ஜனாதிபதிக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா.





 மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது அவரது வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

மேலும், மாலைதீவு ஜனாதிபதியின் மனைவி பஸ்னா அஹமட்டுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றுக்கொண்டுள்ளார் ன்பது குறிப்பிடத்தக்கது.