இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான முன்னாள் விம்பிள்டன் இரட்டையர் சாம்பியனான சானியா மிர்சா 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு மிர்சாவின் கருத்துக்கள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இது எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். வாரந்தோறும் அந்த முடிவை நோக்கிச் செல்கிறேன். இந்த சீசனில் கூட நீடிக்க முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதை நான் விரும்புகிறேன்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடைசியாக செப்டம்பரில் ஆஸ்ட்ராவா ஓபனில் சீனாவின் ஜாங் ஷுவாயுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றார்.காயங்கள் மற்றும் ஒரு இளம் குடும்பம் தனது தொழில்முறை வாழ்க்கைக்கு திரையாக மாறி வருகிறது என்று அவர் ஒப்புக்கொள்கிறார்."எனது காயம் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறேன், எனது மூன்று வயது மகனுடன் பயணம் செய்து விளையாட வருவதன் மூலம் அவனையும் சேர்த்தே நான் ஆபத்தில் ஆழ்த்துகிறேன். இதை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். என் உடல் சோர்வடைகிறது என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
Post a Comment
Post a Comment