கௌரவிக்கும் நிகழ்வு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  கொரோனா தடுப்பூசி வழங்கல் ஆரம்பித்து இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கமைவாக 'ஐக்கியமாக – ஒரே மனதுடன் வலுவாக' எனும் கருப்பொருளுக்கமைவாக பெருந்தொற்றுக்கு சவால் விடுத்த மனிதநேயத்திற்கு செய்யும் மரியாதை எனும் நோக்குடன் கொரோனா தொற்றை தடுப்பதற்கு அரும்பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும்; இடம்பெற்றன.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று யங்ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் எற்பாட்டில் அக்கரைப்பற்று 9 பிரிவின்  பல்தேவைக்கட்டடத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஹ.டிலக்ஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டி.வீரசிங்கவின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான சிந்துஜா பிரதீபன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் கே.சசீந்திரன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மருத்துவ தாதிகள் கிராம உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
பொதுமக்களை இத்தொற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் சுகாதார அமைச்சு சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச சபையினர் எடுத்த முயற்சியினை பாராட்டி பலரும் உரையாற்றினர்.
இதேநேரம் பிரதேச செயலாளர் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அப்பணிமனையின் உத்தியோகத்தர்களுக்கும் விசேடமாக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவி;த்தார்.
இறுதியாக அர்ப்பணிப்போடு சேவையாற்றிய பிரதேச செயலாளர் சுகாதாரத்துறை ஊழியர்கள் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் ஏற்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனா