(க.கிஷாந்தன்)
தலவாக்கலை பெருந்தோட்ட கம்பெனிக்கு உட்பட்ட கிளாரெண்டன் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டு சிறந்த கொழுந்து அறுவடை செய்பவர்க்கான தேயிலை பறிக்கும் போட்டி 29.01.2022 அன்று குறித்த தோட்டத்தில் 7ம் இலக்கம் கொண்ட தேயிலை மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
முகாமையாளர் இஷான் முகமட் தலைமையில் இடம்பெற்ற இந்த தேயிலை பறிக்கும் போட்டியில் அதிதிகளாக நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பெருந்தோட்ட கம்பனியின் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முகாமையாளர் ராம், தோட்ட அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பத்து நிமிடத்தில் கொழுந்து அறுவடை செய்யும் நிறைக்கு ஏற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதற்கு ஏற்ப எம்.விஜயலட்சுமி 2 கிலோ 560 கிராம் கொழுந்தை பறித்து முதலாம் இடத்தையும், இருதயசாமி ரட்ணமேரி 2 கிலோ 260 கிராம் பறித்து இரண்டாம் இடத்தையும், சுப்பிரமணியம் கோமதி 2 கிலோ 200 கிராம் கொழுந்து பறித்து மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும், பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களையும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கி வைத்து தோட்டத் தொழிலாளர்களை கௌரவப்படுத்திய விசேட அம்சமாகும்.
Post a Comment
Post a Comment