ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள்




 .


சுகிர்தகுமார் 0777113659    


  அரச அலுவலகங்களிலும் தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வுகள்  இடம்பெற்று வருகின்றன.

இதற்;கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக இன்று இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமான்டர் ஏ.சி.அபயகோன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை சிறப்பித்தார்.

பிரதேச செயலாளரின் பொங்கல் நிகழ்வோடு ஆரம்பமான தைப்பொங்கல் பூஜை வழிபாடுகளை அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கஜமுகசர்மா நடாத்தி வைத்தார்.

தொடர்ந்து சூரியபகவானுக்கான பிரார்த்தனைகளோடு உழவருக்கு உதவி செய்யும் கோமாதாவிற்கான விசேட பூஜைகள் இடம்பெற்றன.

பின்னர் பிரிகேட் கொமாண்டர் ஏ.சி.அபயகோன்  பிரதம குரு சிவஸ்ரீ கஜமுகசர்மா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன் பின்னராக பிரதேசத்தின் விவசாயிகள் ஐவர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் நிறைவாக காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமையக சமுர்த்தி முகாமையாளர் என்.கிருபாகரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வஸ்டர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.