பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(17) இரவு குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் இனங்காணப்படாதிருந்த நிலையில் இன்று காலை நிந்தவூர் 9 பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஆதம்பாவா நிஹ்மதுல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய ஸ்தலத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சடலம் நீதிவானின் வருகையை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment