நல்லிணக்க குழுக்களின்,அமர்வு




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தின் (PCA)   அனுசரணையில் இயங்கி வரும்  
அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20 பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 20 பிரதேச நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள்  மற்றும் 20 பிரதேச பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்களுக்கான ஒன்று அமர்வு அம்பாறையில் புதன்கிழமை (19)  இடம்பெற்றது .


அம்பாறை மாவட்டத்தில்  குறித்த  நல்லிணக்க குழுக்களின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்
கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக கேட்றியப்பட்டு எதிர்காலத்தில் மாவட்ட, பிரதேச சமுக மட்டத்தில் மேற்கொள்ளவுள்ள  நல்லிணக்க முன்னெடுப்புக்கள் பற்றி  கலந்துரையாடப்பட்டது.


சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத் தின் தேசிய பணிப்பாளர் ரீ. தயாபரன் ,முகாமையாளர் டி.இரஜந்திரன் , அரச சார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ. எல். எம். இர்பான் , சமாதான சமுக பணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான எம்.எல்.ஏ.மாஜீத்,  கே. டி. ரோகிணி , எச். எஸ். ஹசனி, சுரேகா அத்தநாயக்க , மாவட்ட நல்லிணக்க மன்றத்தின்  இனைப்பாளர்  எஸ்.எல்.ஏ.அஸீஸ் மற்றும் பிரதேச  நல்லிணக்க  மன்றங்ககள், இளைஞர் நல்லிணக்க மன்றங்ககளின்  இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

--