கௌரவிப்பு !




 


பிரதேச சபை நலன்புரி அமைப்பினால் உத்தியோகத்தர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கௌரவிப்பு ! 


நூருல் ஹுதா உமர் 


இலங்கையிலுள்ள 126  உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான LDSP திட்டத்தின் ஊடாக நடாத்தப்பட்ட (PPTA) போட்டி  நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அக்கரைப்பற்று பிரதேச சபை அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை தன்வசம் ஆக்கிக் கொண்டது. இதற்காக நிர்வாக ரீதியாக தன்னை அர்ப்பணித்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல் முகம்மட் இர்பான் மற்றும் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்றது. 


அக்கரைப்பற்று பிரதேச சபையின் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில்  பிரதேச சபையின் கௌரவத்திற்காக நிர்வாக ரீதியாக தன்னை அர்ப்பணித்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல் முகம்மட் இர்பான் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதன் போது சிறந்தமுறையில் மக்கள் பணியாற்றிவரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்களுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்களினால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.