மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) தனது பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான மெஸ்சேன்ஜ்ர் (Messenger) மெசேஜ்ஜிங் தளத்தில் ஒரு முக்கிய புதிய அம்சத்தை அறிவித்திருக்கிறார்.
இந்த புதிய அம்சம் மெஸ்சேன்ஜ்ர் மேடையில் உள்ள பயனர்களின் தனியுரிமையைக் கணிசமாக மேம்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
இனி மெஸ்சேன்ஜ்ர் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் இரகசிய உரையாடலில் யாரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், உடனே அது அந்த பயனருக்குத் தெரிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
டிஸப்பியரிங் மெசேஜ் இன்னும் அதிக பாதுகாப்புடன் பலப்படுகிறதா?
அதாவது, நீங்கள் மெஸ்சேன்ஜ்ர் மூலம் மேற்கொள்ளும் இரகசிய உரையாடலில், டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை நீங்கள் பயன்படுத்தும் போது, எதிர் முனையில் உள்ள பயனர் உங்களின் டிஸப்பியரிங் மெசேஜ்களை பதிவு செய்வதற்காக ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இனி அந்த பயனருக்கு ஸ்கிரீன்ஷாட் தொடர்பான அறிவிப்பு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி மெஸ்சேன்ஜ்ர் பயனர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ஜனவரி 27, 2022 அன்று மார்க் ஜுக்கர்பெர்க் எழுதியது, “எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசஞ்சர் அரட்டைகளுக்கான புதிய புதுப்பிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இனி யாராவது மறைந்திருக்கும் செய்தியை ஸ்கிரீன்ஷாட் செய்தால் உடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் அறிவிப்பை மெஸ்சேன்ஜ்ர் அனுப்பும். ” என்று அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக் முதன்முதலில் நவம்பர் 2020 இல் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் காணாமல் போகும் செய்திகளை அறிமுகப்படுத்தியது. அதாவது, டிஸப்பியரிங் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது.
Post a Comment
Post a Comment