வி.சுகிர்தகுமார் 0777113659
இந்து பௌத்த மதங்களின் துறவிகள் நண்பர்களாக இணைந்து 45 வருட நிறைவின் நினைவான அவர்களது தெய்வீக நட்பை கொண்டாடிய நெகிழ்ச்சிமிகு நிகழ்வு இன்று தம்பட்டை சுவாமி நித்தியானந்தா தபோவனத்தில் இடம்பெற்றது.
இன நல்லிணக்கத்திற்குரிய சிறந்த முன்னுதாரணமான நிகழ்வில் 1975 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சிறந்த நண்பர்களாக வாழ்ந்துவரும் ரிசிகேச சுவாமிகள் ஸ்ரீமத் நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் ஜி மற்றும் வணக்கத்திற்குரிய அத்தி பூஜ்ய உடுவன ரத்னபால நாயக்க தேரர் இணைந்து கொண்டு நிகழ்வை நடாத்தி வைத்தனர்.
இன மத மொழி கடந்து ஒற்றுமையை உணர வைக்கும் இச்சிறப்பு நிகழ்வில் விசேட அருளாளராக கலாநிதி அத்தி பூஜ்ய மெதகொட சுமய திஸ்ஸ நாயக்க தேரர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் வணக்கத்திற்குரிய பௌத்த துறவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக வருகைதந்த துறவிகளை இந்துமத முறைப்படி பாடசாலை மாணவிகள் இணைந்து வரவேற்பு நடனங்கள் மூலம் வரவேற்றனர்.
பின்னர் ஸ்ரீமத் நித்தியானந்தா சரஸ்வதி மகராஜ் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் அன்பானந்தா மகராஜி வருகை தந்த பௌத்த துறவிகள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து இரு துறவிகளின் 45 வருடகால நினைவை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட புகைப்பட அல்பத்தினை சமூகஜோதி எஸ்.செந்தூரராஜா வணக்கத்திற்குரிய அத்தி பூஜ்ய உடுவன ரத்னபால நாயக்க தேரரிடம் கையளித்ததுடன் அது தொடர்பான தொகுப்பு காட்சியும் காணொளி மூலமாக காண்பிக்கப்பட்டது.
இதேநேரம் நிகழ்வின் நினைவாக கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து கலாநிதி அத்தி பூஜ்ய மெதகொட சுமய திஸ்ஸ நாயக்க தேரர் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவரது உரையில் இந்து பௌத்த துறவிகளின் இனமத மொழி கடந்த நட்பு பற்றியும் இதுவே நமது நாட்டிற்கு தேவையானதும் என்றார்.
இதன் பின் உரையாற்றிய வணக்கத்திற்குரிய அத்தி பூஜ்ய உடுவன ரத்னபால நாயக்க தேரர் தமிழில் உரையாற்றி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.
இறுதியாக நட்பின் அடையாளத்தை பிரதிபலிக்கும் முகமாக மடிக்கணிணி ஒன்றினை பௌத்த பிக்கு ஸ்ரீமத் நித்தியானந்தா சரஸ்வதி மகராஜிடம் வழங்கி வைத்ததுடன் இருவரும் இணைந்து மரக்கன்றொன்றினையும் நாட்டி வைத்தனர்.

Post a Comment
Post a Comment