வி.சுகிர்தகுமார் 0777113659
மக்கள் வங்கியின் தேசிய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் இன்று வழங்கி வைக்கப்பட்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்திற்காக 650000 ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளும் இன்று ஒப்படைக்கப்பட்டன.
திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் அதிபர் சுரேஸ் ஸ்டீபன்சன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் வங்கியின் இந்துமாமன்றத்தின் தேசிய செயலாளரும் வெள்ளவத்தை கிளையின் முகாமையாளருமான ஜி.எஸ்.மணிமாறன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மக்கள் வங்கியின் அம்பாரை மாவட்ட பிராந்திய அலுவலகத்தின் பிரதி முகாமையாளர் வி.ஜனார்த்தனன், இந்துமாமன்ற அம்பாரை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுந்தரராஜன், முகாமையாளர்களான கே.கஜேந்திரன், எம்.பி.எம்.அன்வர், பிரதி முகாமையாளர்களான எஸ்.ராஜகாந்தன், எஸ்.சுதாகரன், வங்கி உத்தியோகத்தர் எஸ்.மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்கு தேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட போட்டோ பிரதி இயந்திரம் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் வி.சந்திரசேகரம் தலைமையில் இந்துமாமன்ற கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் வங்கி அதிகாரிகளுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
விசேட புஜைகளை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் நந்திக்கொடியேற்றப்பட்டது. பின்னர் கலைநிகழ்வும் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் இந்துமாமன்றத்தின் தேசிய செயலாளர் ஜி.எஸ்.மணிமாறன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இதன் பின்னராக ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்திற்கான மன்றத்திற்கான கதிரைகள் ஒப்படைக்கப்பட்டதுடன் மன்றத்தினால் நிருவகிக்கப்படும் அறநெறி ஆசிரியர்களுக்காக ஜெயச்சந்திரன் டெக்டைல்ஸ் நிறுவனத்தால் வழங்கி வைக்கப்பட்ட சீருடைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment
Post a Comment