இலத்திரனியல் ஊடகங்களினூடாகவும்,பத்திரிகைகள் வாயிலாகவும் பங்களிப்பினை வழங்கி, ஈழத்து இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர் அல்ஹாஜ் எம்எச்ஏ சமத் sir.
அவர்,அண்மைக் காலமாக, மொழிமாற்று இலக்கியத்தின் மூலம் அரும் பணியாற்றிப் படைப்பாளர்களை உலகின் பல பாகங்களுக்கும் அறிமுகம் செய்து வருகின்றார்..தமிழில் கவிதைகளைப் பதிவிட்டுப் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள்ளேயே, அதனை ஆங்கிலக் கவிதை மரபில் மொழிமாற்றம் செய்யும் திறமை அவருக்கு வாய்த்திருக்கின்றது.
கல்வி, பயிற்சி,அனுபவம் , என்பன அவரைச் செதுக்கியிருக்கின்றன. "புலவர்மணி ஆமு ஷரிபுத்தீன் அவர்களின் மாணவன் "என்று சொல்வதில் சந்தோஷித்துக் கொள்கின்ற இந்த எண்பது அகவை இளைஞனின் தமிழ்மொழி ஆளுமையும் வியந்துரைக்கத் தக்கதே. சிங்கள மொழித் தேர்ச்சியும் இவருக்கு உண்டு.இதனால்தான் வீரகேசரி பத்திரிகை மற்றும் IMO(UN) என்பவற்றில் தமிழ்,ஆங்கில சிங்கள மொழிமாற்றுனராகக் கடமையாற்றும் சந்தர்ப்பம் ,(2002-2005) இவருக்குக் கிட்டியிருக்கின்றது.
பட்டங்கள பல பெற்றவராக(B.Com(cey),MBA,FBIM,
Dip in English,Dip in commerce, Trained teacher),கல்விமானாக,சமூக அக்கறையோடு கடமையாற்றியவர் இவர்.தொழில் நுட்பக் கல்வியில் அக்கறையற்றிருந்த முஸ்லிம் மாணவர்கள் விழிப்புணர்ச்சி பெறும் வகையில் கருத்தரங்கு,வானொலி,தொலைக்காட்சிப் பேட்டிகள் நடத்தியவர்.நளீம் ஹாஜியாரின் வேண்டுகோளுக்கமைய இக்ரா தொழில்நுட்பக் கல்லூரியின் ஸ்தாபக அதிபராகவும் இருந்து திறம்படப் பணியாற்றியவர்.மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பிரிவொன்று அமைவதில் முன்னின்றவர். அம்பாரை,மட்டக்களப்பு மாவட்டங்களில்RVTC,DVTC பயிற்சி மையங்கள் அமைய ஆலோசனை வழங்கி ஒத்துழைத்தவர்.
பாடசாலை ஆசிரியராக,தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளராக,அதிபராக,அமைச்சுக்களின் ஆலோசகராக,அமைச்சர்கள் எம்எச்எம் அஷ்ரப் ,பேரியல் அஷ்ரப் ஆகியோரின் விஷேட ஆலோசகராகப் பணியாற்றி மாணவர் மனங்களிலும், மக்கள் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சமத் sir அவர்கள்.
கல்வி பயிற்சியென வெளி நாடுகள் பலவற்றிற்கு விஜயம் செய்துள்ள அவர், கம்பியா,நைஜீரியா போன்ற நாடுகளில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இளகிய மனம்,மெலிந்த தோற்றம் கொண்ட, மக்களின் மனங்களை தன் பணிகளால் வென்ற அல்ஹாஜ் எம்எச்ஏ சமத் sir அவர்கள் சுக தேகியாக இன்னும் பல்லாண்டு வாழவேண்டும்.சமுகப் பணியும் இலக்கியப் பணியும் மேலும் புரிய வேண்டுமென்பதே நமது அவா.
Post a Comment
Post a Comment