(க.கிஷாந்தன்)
உலகமெங்கும் வாழும் இந்துக்கள் 14.01.2022 அன்று மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அக்கரைப்பற்றில் மளிகைக் கடைகளின் முன்பாகவும் மக்கள் வெள்ளம்.
இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் 13.01.2022 அன்று ஆயத்தமாகினர்.தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு பெருந்திரளான மக்கள் குழுமி இருந்தனர்.
எனினும் பொருட்களின் விலையேற்றதால் குறிப்பிட்டளவிலான பொருட்களையே மக்கள் கொள்வனவு செய்யக்கூடியதை காணக்கூடியதாக இருந்தது.
சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தன.
Post a Comment
Post a Comment