அட்டன் கல்வி வலய பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கொவிட்





(க.கிஷாந்தன்)

 

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தொற்றுக்குரிய மாணவர்கள் கல்விக் கற்ற வகுப்புகளுக்கு கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். இன்று பாடசாலைக்கு 150 மாணவர்கள் வரை சமூகமளித்திருந்தாக அவர் கூறினார்.

 

இவர்களில் நோய் அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

 

அதேபோல் இன்று 63 ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

 

தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடி தொடர்பை பேணியவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 500 மாணவர்கள் வரையில் வீடுகளில் இருக்க பணிக்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.