2022 ஆம் ஆண்டிற்கான சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு





 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



சீஹாஸ் ஹெம்பஸ் மற்றும் ஹொலிஜ் ஒப் நொலேஜ் ஒருங்கிணைப்பில் 2022 ஆம் ஆண்டிற்கான  சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டம் காரைதீவு தனியார் விடுதியில் சனிக்கிழமை(22) இடம்பெற்றது.

இந்நிகழ்வானது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு இளைஞர் அமைப்பின் ஸ்தாப தலைவருமான தாணீஸ் றஹ்மதுல்லாஹ் தலைமையில் ஆரம்பமானது.இதன் படி முதலில் மதஅனுஸ்டானம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வரவேற்புரை தலைமையுரைகள் இடம்பெற்றன.

தலைமை உரையினை தாணீஸ் ரஹ்மதுல்லாஹ் நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து பிரதம அதிதி உரையினை மனித உரிமை செயற்பாட்டாளர் ஆய்வாளர் சிரேஸ்ட விரிவுரையாளர்  பேராசிரியர் சன்திமா  விஜயகுணவர்த்தன மேற்கொண்டார்.மேலும் இந்நிகழ்விற்கு வருகை தந்த சிறப்பு அதிதிகள் பிரத அதிதிகள் கௌரவ அதிதிகள் ஆகியோரினால் மாணவர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் சிறந்த  ஊடகவியலாளர்களுக்கும்  சான்றிதழ்களும் விருதுகளும்   வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


ஆசிய சாதனை புத்தகத்தில் ஹிராண்ட் மாஸ்டர் எனும் மகுடம் சூடிய இலங்கை சிறுமியான நிந்தவூரை சேர்ந்த றனீஸ் பாத்திமா அனா என்ற சாதனை சிறுமிக்கும் சாதனையாளர்களுக்கான விருது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் இறுதியாக நன்றியுரையுடன் இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது.